நான் சந்தித்த "பார்வதி--பரமேஸ்வரர்"
வயது ஏற, ஏற நான் ஆசீர்வதிக்கும் நபர்களின் எண்ணிக்கை கூடிகொண்டே போவது ஒரு புறம் இருக்க, நான் ஆசீர்வாதம் பெரும் பெரியோர்களின் தொகையும் குறைந்து கொண்டேதான் வருகிறது என்பதும் நிதர்சனம். வயது என்ற ஒரே தகுதியின் அடிப்படையில் தான் இவைகள் நடந்து வருகின்றன.
இன்று காலை ஞ்சாயிற்றுக்கிழமை ட்ராஃபிக் அநுகூலமாக இருந்ததால் என்னைவிட வயதில் பெரிய தம்பதியரை சந்திக்க கிளம்பிவிட்டேன்.
வீட்டில் நுழைந்தவுடனேயே பெரியவர் அட்டகாசமாக தரையில் அமர்ந்து ஒரு வாழைக்காயை ...அருவாள் மணையில் நீட்டுவாக்காக இரண்டாக பிளந்து கொண்டிருந்தார். அருகிலேயே சில பாத்திரங்களில் ஏற்கனவேயே அரிந்து முடிந்த முருங்கைக் காய், வெண்டைக்காய், தக்காளி, வெள்ளரிக்காய் என்று நிரப்பப்பட்டிருந்தன. மாமா தன் படர்ந்த நெற்றியில், பட்டை விபூதியின் மேல் சந்தனம், குங்குமம் மிளிர வாங்கோ! வாங்கோ! என்று வாய் நிறைய வரவேற்றதோடு மிகச்சிரமத்துடன் எழுந்திருக்கவும் முயல அவரை ஆசுவாசப்படுத்தி உட்கார வைத்தேன். மாமியும் முகம் நிறைய மஞ்சள் பூசிக்கொண்ட முகத்தில் மிகப்பெரிய குங்குமப்பொட்டுடன் காது குளிர ஒரு சுலோகத்தைச் சொல்லிக்கொண்டு சமையல் கட்டிலிருந்து கையைத் துடைத்துகோண்டு என்னை வரவேற்பதில் ஆர்வம் காட்டினார். உள்ளிருந்து ஏதோ ஸ்வீட் கிளறும் நறுமணமும் மூக்கைத் துளைக்க ஏதோ விசேஷம் நடக்கிறது என்பதை எளிதில் புரிந்து கொள்ளமுடிந்தது. இதோ ஒரு நொடியில் காஃப்பி எடுத்து வருவதாக மாமி திரும்ப அவரை நிறுத்தி வைத்து "ஆமாம்! என்ன விசேஷம் உங்காத்தில்? தடபுடலாக விருந்து ஏற்பாடு நடக்கிறதே " என்று வினவினேன். இருவருமே சற்றுத்தயங்க மாமி முந்திக்கொண்டு இன்று எங்கள் மேரியேஜ் டே, என்று அசாத்திய வெட்கத்துடன் கூறினார். மாமாவும் சிறிது சங்கடத்துடன் ஏதோ தப்பு செய்து விட்டது போல் இன்றோடு இவளோடு குடித்தனம் நடத்தி 58 வருஷம் கம்ப்ளீட், என்று சிறிது அசடு வழிந்தார். நான் பிரமித்துப் போய், "என்ன மாமா பெருமைப்பட வேண்டிய விஷயம் இது! இதுக்கு நீங்க, 2 பேருமே கூச்சப்படறேளே, முதலில் 2 பேரும் சேர்ந்து நில்லுங்கோ! ஒரு நமஸ்காரத்தைப் பண்ணிடறேன்!" என்று சாஷ்டாங்கமான நமஸ்காரத்தை அபிவாதையுடன் சொல்லி அந்த அபூர்வ தம்பதிகளின் அபரிமிதமான ஆசீர்வாதத்தை அள்ளிக்கோண்டேன். முடிந்தால் சாப்பிடவருவதாக கூறி என்னை எதிர்பார்த்து காத்திருக்கும் என் சகதர்மணிக்காக நடையைக் கட்டினேன்.
அந்த மாமாவிற்கு 82-ம், மாமிக்கு 78-வயதும் ஆகிறது. ஆஸ்திரேலியாவிலும், சிங்கப்பூரிலும் 2 பிள்ளைகளும், கும்பகோணத்தில் ஒரு பெண்ணும் இருக்கிறார்கள். 2-தடவை ஃபாரின் சென்று திரும்பிவிட்டார்கள். தன் பென்ஷனை நம்பித்தான் குடும்பம் நடக்கிறது. மிக்க ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து மிகச்சிரமப்பட்டு முன்னுக்கு வந்தவர்கள்.
இந்த வயதிலும் ஒரு விருந்து செய்யும் அளவிற்கு அவர்கள் இருப்பது இளம் வயதில் கடும் உழைப்பும், இறை பக்தியுமே என்று நினைக்கிறேன்.
நம் கல்கத்தா தமிழர்களிலும் பலர் ஏறக்குறைய மேற்கூறிய அதிசய தம்பதிகளைப்போல் இருக்கிறார்கள் என்பது எனக்கு நன்றாகவே தெரியும்.
இதை உடனே உங்களுடன் பகிர்ந்து கொள்ளவில்லை என்றால் தலையே வெடித்துவிடும் போலிருந்தது. தொல்லை கொடுத்ததற்கு மன்னிக்கவும்

No comments:
Post a Comment